சட்டப்பேரவையில் இன்று (செப்.7) நிலவிய பரபரப்பான சூழலுக்கு இடையே, முதலமைச்சர் ஜோசப் விஜய் காட்டிய கண்ணியமான செயலொன்று அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது நீண்ட நேரம் அமர்ந்திருந்த திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரனால் எளிதில் எழுந்து நிற்க முடியாமல் சிரமப்பட்ட சூழலில், அதை உடனடியாகக் கவனித்த முதலமைச்சர் விஜய் தாமே முன்வந்து அவரது கையைப் பிடித்து எழுந்து நிற்க உதவி செய்தார்.

சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலும் சட்டப்பேரவையிலும் முதலமைச்சர் விஜய்யைப் பற்றி ஏகவசனத்திலும் ஒருமையில் மரியாதை இன்றியும் துரை சந்திரசேகரன் விமர்சித்துப் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவ்வாறு தன்மீது கடுமையான அரசியல் விமர்சனங்களையும் மரியாதைக் குறைவான பேச்சுகளையும் முன்வைத்த அதே எதிர்க்கட்சி உறுப்பினருக்கு, அவரது வயதையும் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு அவை நாகரிகத்தோடு முதலமைச்சர் ஓடோடிச் சென்று கைகொடுத்து உதவிய இச்சம்பவம், அரசியல் நாகரிகத்தின் உச்சமாகப் பார்க்கப்பட்டுப் பேரவையில் இருந்த அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.