Home செய்திகள் அரசியல் வேறுபாட்டை தாண்டிய நாகரிகம் – அவையில் கவனம் ஈர்த்த பிரேமலதா!

அரசியல் வேறுபாட்டை தாண்டிய நாகரிகம் – அவையில் கவனம் ஈர்த்த பிரேமலதா!

தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு நிகழ்வு களைகட்டிய நிலையில், புதிய உறுப்பினராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், தனது பதவியேற்பு முடிந்ததும் மரபுப்படி அவையின் முன்னவரிடம் கைகுலுக்கிய பின், நேராக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கை அருகே சென்று அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஒருபுறம் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் அரசியல் போட்டிகள் நிலவினாலும், அவை மாண்பைக் காக்கும் வகையில் புதிய உறுப்பினராகப் பிரேமலதா விஜயகாந்த் காட்டிய இந்த நாகரிகமான அணுகுமுறை அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Exit mobile version