Saturday, May 23, 2026
Homeசெய்திகள்“மாறன் குரூப்பின் புதிய OTT... ரிமோட் டீசரால் பரபரப்பு!”

“மாறன் குரூப்பின் புதிய OTT… ரிமோட் டீசரால் பரபரப்பு!”

“தமிழகத்தில் கார்ப்பரேட் லெவல் OTT Launch!”

தமிழகத்தின் முன்னணி ஊடகப் பிரமுகர்களில் ஒருவரான தயாநிதி மாறன் மற்றும் அவரது மகன் கரண் மாறன் ஆகியோர் இணைந்து, முற்றிலும் புதிய வடிவிலான ‘மொபைல்-ஃபர்ஸ்ட்’ டிஜிட்டல் ஓடிடி (OTT) தளம் ஒன்றை ‘மாறன் குரூப்’ (Maran Group) பேனரின் கீழ் வரும் மே 28-ஆம் தேதி பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதற்கான ஒரு புதுமையான விளம்பர உத்தியாக (Teaser) இந்த ரிமோட்டுகள் தற்போது பிரபலங்கள் மற்றும் விஐபிக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பிரத்யேகமாகப் பார்க்கும் வகையில், இன்றைய இளைய தலைமுறையைக் கவரும் ‘மைக்ரோ டிராமாக்கள்’ (Short Dramas) மற்றும் குறுகிய வடிவ வீடியோ தொடர்களைக் கட்டணச் சந்தா முறையில் (Subscription Platform) வழங்குவதற்காகவே இந்தத் தளம் பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரிமோட்டில் அச்சிடப்பட்டுள்ள “Wait till May 28, 2026” என்ற வரிகள் இந்தத் தளத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைக் குறிப்பதுடன், “Control Marala… Experience Mariduchu.” (கண்ட்ரோல் மாறல… எக்ஸ்பீரியன்ஸ் மாறிடுச்சு) என்ற இவர்களது டேக்லைன், பாரம்பரிய மீடியா உலகிலிருந்து இந்த டிஜிட்டல் தளம் முற்றிலும் ஒரு புதுவித அனுபவத்தைத் தரும் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

தற்போது இந்த ரிமோட் வெறும் ப்ரோமோஷனுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், வரும் மே 28-ஆம் தேதி இவர்களின் ஆப் (App) அல்லது சமூக வலைத்தளப் பக்கங்களில் இதைப் பயன்படுத்துவதற்கான லிங்க் மற்றும் இதர வழிகாட்டுதல்கள் வெளியானவுடன், இதனைப் பயன்படுத்திப் புதிய டிஜிட்டல் உலகத்தை எக்ஸ்பீரியன்ஸ் செய்யலாம்;

எத்தனையோ ப்ரோமோஷன் உத்திகளைப் பார்த்த தமிழ் நெட்டிசன்களுக்கு, இந்த ரிமோட் டீசர் ஐடியா செம புதுமையாகவும், கார்ப்பரேட் லெவல் மார்க்கெட்டிங் மூவாகவும் அமைந்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments