Home Uncategorized தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகை ‘ஆடிப் பெருக்கு

தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகை ‘ஆடிப் பெருக்கு

தமிழர்களின் மிக பழமையான பண்டிகை எது தெரியுமா…தீபாவளி அல்ல.ஆடி 18 தான்.ஆடி பட்டம் விளைவிக்க வரும் காவிரித்தாயை கர்ப்பிணியாக கருதி காதோலை ,கருகமணி ,நவதானியம் தூவி வழிபடும் நாள்..காவிரியில் குளிப்பது கங்கையில் குளிப்பதன் புண்ணியத்தை கொடுக்கும்.

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக தமிழ் விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை.

நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

இந்த நாளில் காவிரிக் கரைத் தலங்களிலெல்லாம் மக்கள் கூடி அன்னை காவிரியை வழிபடுவர். மேலும் ‘இந்த நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் அன்னை காவிரி எழுந்தருளியிருப்பாள்’ என்பது ஐதிகம்… நீரைத் தெய்வமாக வழிபடும் மரபு நம்முடையது. இந்தப் பிரபஞ்சத்தின் ஆதாரசக்தியாக நீர் விளங்குகிறது.

நீரால் உணவு உண்டாகிறது. உணவே உயிரை வளர்க்கிறது. அத்தகைய நீரைக் கொண்டாடும் ஒரு திருவிழா ‘ ஆடிப் பெருக்கு’. தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகை இது.

இந்த நாளில் காவிரிக் கரைத் தலங்களிலெல்லாம் மக்கள் கூடி அன்னை காவிரியை வழிபடுவர். மேலும் ‘இந்த நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் அன்னை காவிரி எழுந்தருளியிருப்பாள்’ என்பது ஐதிகம்.

Exit mobile version