ஆவின் நிறுவனம் தனது உற்பத்தியை அதிகப்படுத்த முக்கிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதாவது, சென்னையில் புதிதாக இரண்டு இடங்களில் உற்பத்தி மையத்தை திறக்கவுள்ளனர். இதற்காக மாதவரம், அச்சரப்பாக்கம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாதவரத்தில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் பாலும், அச்சரப்பாக்கத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பாலும் கையாளும் அளவிற்கு கட்டமைக்கப்படவுள்ளது.
இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆவின் நிறுவனத்தின் புதிய இரண்டு உற்பத்தி தளங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி என்பது அப்படியே இரண்டு மடங்காக மாறிவிடும் என்கின்றனர். அதன்படி, மொத்த உற்பத்தி 22 லட்சம் லிட்டராக மாறுமாம்
