போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக நடிகர் ஸ்ரீகாந்துக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரீசண்டா ஒரு ஒரு பாரில் தகராறில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டாய்ங்க. இதைத்தொடர்ந்து அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி, போதை பொருள் பயன்படுத்துதல் உள்ளிட்ட புகார்கள் கொடுக்கப்பட்ட தகவல் லீக் ஆச்சு. எனவே இதுகுறித்து பிரசாத்திடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவரோட மொபைலை போலீஸ் சோதனை செஞ்ச்சாய்ங்க. அதைத் தொடர்ந்து போதைப் பொருளை யாரிடம் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொக்கைன் சப்ளையரான பிரதீப் குமார் என்பவர் சிக்கினார். அவிய்ங்க இருவரையும் விசாரிக்கும் போது, முன்னொரு கால ஹேண்ட்ஸம் ஆக்டர் ஸ்ரீகாந்துக்கு பிரதீப்பிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக அதிமுக நிர்வாகி பிரசாத் வாக்குமூலம் அளிச்சார்.
அதன் அடிப்படையில் இன்னிக்கு (ஜூன் 23) மார்னிங் 8 மணி வாக்கில் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள F3 காவல் நிலையத்திற்கு அழைச்சுது வந்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டாய்ங்க.
இதுக்கிடையிலே போதைப்பொருள் வழக்கில் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டதையடுத்து அதிமுகவுக்கு கண்டனங்களும், விமர்சனங்களும் வலுத்தது. எனவே பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கிபுடுச்சு அதிமுக.
அதே சமயம் கொகெய்ன் போதை பொருள் பயன்படுத்தினாரா என்று ர் ஸ்ரீகாந்துக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது போலீசார் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்துள்ளனர்.தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வாராய்ங்க.
ஸ்ரீகாந்த் பிள்ளையாண்டான் பிரதீப் என்கிற நபரிடம் போதை பொருளை கிராம் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கி இருக்கிறார்.அதன் அடிப்படையில் பிரதீப் வாக்குமூலத்தில் ஸ்ரீகாந்த் 40 முறை போதை பொருள் வாங்கி உள்ளதாகவும் அதற்கான பணத்தை பிரதீப்புக்கு GPay மூலம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சுமார் ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்போ முன்னாள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து ‘தீங்கரை’ என்ற படத்தை தயாரித்து வந்துள்ளார் என்பதும் அப்பட தயாரிச்சப்ப தொடர்பில் இருந்த பலரையும் விசாரணை வளையத்துக்குள் போலீச் கொண்டு வாராய்ங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடிசினல் ரிப்போர்ட்
இந்தியாவில் கொகெய்ன் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
இந்தியாவில் போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்காக நர்கோட்டிக் மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் சட்டம், 1985 (Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 – NDPS Act) என்ற கடுமையான சட்டம் உள்ளது. இந்த சட்டம் கொகெய்ன் உட்படப் பல போதைப் பொருட்களின் உற்பத்தி, தயாரிப்பு, சாகுபடி, வைத்திருத்தல், விற்பனை, வாங்குதல், கடத்துதல், சேமித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகிய அனைத்தையும் தடை செய்கிறது. மருத்துவ மற்றும் அறிவியல் நோக்கங்களுக்காகவும், அரசாங்கத்தின் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் உரிமங்களுக்கு உட்பட்டு மட்டுமே இவற்றை பயன்படுத்த முடியும்.
NDPS சட்டத்தின் கீழ் கொகெய்ன் பயன்பாட்டிற்கான தண்டனைகள்:
கொகெய்ன் பயன்படுத்தியதற்கான தண்டனை, வைத்திருக்கும் கொகெய்னின் அளவைப் பொறுத்து மாறுபடும்.
குறைந்த அளவு (Small Quantity): 2 கிராம் வரை கொகெய்ன் வைத்திருந்தால், அதிகபட்சமாக 1 ஆண்டு வரை கடுமையான சிறைத்தண்டனை அல்லது ரூ. 20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
குறைந்த அளவை விட அதிகம், வணிக அளவை விட குறைவு (More than small quantity but less than commercial quantity): 2 கிராம் முதல் 100 கிராம் வரை கொகெய்ன் வைத்திருந்தால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
வணிக அளவு (Commercial Quantity): 100 கிராம் அல்லது அதற்கு மேல் கொகெய்ன் வைத்திருந்தால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். நீதிமன்றம் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான அபராதத்தையும் விதிக்கலாம்.
பிற முக்கிய அம்சங்கள்:
கொகெய்ன் தொடர்பான குற்றங்கள் பிணையில் வெளிவர முடியாத குற்றங்களாகும் (Non-bailable offence).
போதைக்கு அடிமையானவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெறுவதாக ஒப்புக்கொண்டால், சில சமயங்களில் வழக்குகளிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம். இது சட்டத்தின் பிரிவு 64A இன் கீழ் வருகிறது.
சுருக்கமாக, இந்தியாவில் கொகெய்ன் பயன்படுத்துவது சட்டப்படி பெரும் குற்றம் என்பதோடு, கடுமையான தண்டனைகளையும், சமூக விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
