திரைப்பட நடிகர் ஸ்ரீமன், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது நெருங்கிய நண்பரான விஜய் -யை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, இந்த உன்னதமான சந்திப்பு குறித்து மிகுந்த பெருமிதத்துடனும் நெகிழ்ச்சியுடனும் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“மக்கள் தீர்ப்பே மகேஸன் தீர்ப்பு” என்ற வாசகத்தை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தான் கூறி வந்ததை நினைவு கூர்ந்துள்ள அவர், எத்தனையோ முறை ஷூட்டிங் தளங்களில் சாதாரணமாய் பார்த்த அதே அலுவலகத்தில், இன்று நாட்டின் ஒரு மிக முக்கியமான மாநிலத்தின் முதலமைச்சராக, அவரது அந்தப் புதிய கம்பீரமான தோற்றத்தில் அவரைப் பார்த்தது பல வருடங்களாகக் கண்ட கனவு நனவானது போன்ற அசாத்திய மகிழ்ச்சியையும் வியப்பையும் தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் சந்தித்துப் பேசிய தருணத்தில் எத்தனையோ நல்ல விஷயங்கள், நாட்டின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து விரிவாகப் பேசியதாகக் கூறியுள்ள ஸ்ரீமன், தங்களது நீண்ட கால நட்பிற்கு முதலமைச்சர் விஜய் அளித்த தனி மரியாதையும் அங்கீகாரமும் வேற லெவலில் இருந்ததாக நெக்குருகியுள்ளார்.
முதலமைச்சர் விஜயின் இந்த டெல்லிப் பயணம் மற்றும் அவரது அனைத்து புதிய முயற்சிகளும் மாபெரும் வெற்றியடைய இறைவனின் ஆசிகள் எப்போதும் இருக்கும் என்றும், அவரது தொலைநோக்குக் கற்பனைகள் அனைத்தும் நிஜமாகி, மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு அவர் கொண்டு செல்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும், தங்களது மாறாத ஆதரவும், அன்பும், பிரார்த்தனைகளும் எப்போதும் அவருடன் இருக்கும் என்றும் “ஓம் நமசிவாய” என்ற முழக்கத்துடன் நடிகர் ஸ்ரீமன் தனது வாழ்த்துப் பதிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
