Home Uncategorized ஆதி சங்கரர் செய்த காரியம்

ஆதி சங்கரர் செய்த காரியம்

உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையானது… உலகின் தொன்மையன கலாச்சாரம் சனாதன தர்மம் என்று அழைக்கப்படும் “இந்துமதம்”. 

பொதுவா சந்நியாசத்தை மேற்கொண்ட நபர் , அதன் பின்னர் தனது இரத்தபந்த சொந்தங்களிலிருந்து முற்றிலுமாக விலகி விடுவார்கள். சந்நியாசம் ஏற்றவரை  அவரது இயற்பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. இது அவரை கருவில் சுமந்த தாயாருக்கும் பொருந்தும். 

அந்த தாயார் முதுமையின் காரணமாக காலமாகிவிட்டால்கூட, அந்த சந்நியாசி தன் தாய்க்கான ஈமக்கிரியைகளைச் செய்வதில்லை. இதுவே இந்துமதத்தில் இன்றளவும் மரபுவழி முறை. ஆனால், இரண்டு சந்நியாசிகள் மட்டும் இதற்கு விதிவிலக்கானவர்கள். ஒருவர் ஆதி சங்கராச்சார்யர் . இன்னொருவர் பட்டினத்தார். 

இறைவனின் அனுக்ரஹத்தால் அவரவர்களின் தாயார்கள் இயற்கையெய்தியபோது, உள்ளுணர்வு உந்தியதன் அடிப்படையில், ஈமக்கிரியை செய்ய சரியான நேரத்தில் வந்து சேர்ந்தவர்கள். இவர்களில் பட்டினத்தார் தனது தாயாரின் உடல்மீது பச்சை வாழை மட்டைகளை அடுக்கி வைத்து, தனது சித்துமேன்மையால் அவைகளை தீ மூட்டி, எரிய வைத்தவர். ஆதிசங்கரர் அவர்கள், தனது தாய்க்கு தகனக்கிரியை செய்து, இறந்தவர்களுக்கு செய்யும் தர்ப்பண சடங்கினை , அதாவது “திதி” கொடுக்கும் சடங்கினை தன் தாயாருக்காக செய்தவர். 

ஆம்! அதனை அவர் செய்த இடம் தற்போதைய கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து, சுமார் 6 கிலோ  மீட்டர் தூரத்திலிருக்கும் “திருவல்லம்”  என்கிற ஊரில் அமைந்துள்ள பரசுராமர் திருக்கோயிலில்தான் ”திதி” கொடுத்துள்ளார். இவர்கள் இருவரைத்தவிர ஆன்மீக உலகில் வேறு எவரும் தங்கள் தாயாருக்கு இறுதிச்சடங்கினை செய்தார்களா என்பது பற்றிய குறிப்புகள் கிட்டவில்லை. 

 

Exit mobile version