Tuesday, March 17, 2026
HomeUncategorizedஆப்பிரிக்கர்கள் ஆண்ட பாரதம்

ஆப்பிரிக்கர்கள் ஆண்ட பாரதம்

பொது:

பாரத தேசத்தின் வரலாறு விசித்திரமானது. பொதுவாக இம்மண்ணை பூர்வீகமாகக் கொண்டவர்கள் சாத்வீகமானவர்கள்.”பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே” என்னும் கோட்பாடுகளின் அடிப்படையில் மாற்று தேசத்தவர்களாயினும்   அவர்களுக்கு தீங்கு எண்ணாதவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 

இத்தகைய எண்ணத்தால்தான் மகத்துவம் மிகுந்த தனிப்பெருமை கொண்ட வாழ்வினை நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும், இதற்காக நம்மால் கொடுக்கப் பட்ட விலை மிகவும் அதிகம். நம் முன்னோர்களை அவர்களை ஏமாற்றியவர்கள் , வதைத்தவர்கள், ஆகியோராலேயே நம் வாழ்வு, நம் வரலாறு, நம் கலாச்சாரம் ஆகியன சிதைக்கப்பட்டன. பல நேரங்களில் இன்றும் சிதைக்கப்பட்டு வருகின்றன. 

அதிசயம் ஆனால் உண்மை:

இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் மிகவும் ஆச்சரியமூட்டும் ஒரு தகவல் இன்று உண்டு. அது என்னவெனில், இன்றும்கூட ஆப்பிரிக்க கண்டத்தின் பல பகுதிகள் மிகவும் பின் தங்கிய பகுதிகளாகவும், அங்குள்ள மக்களை பரிதாபத்திற்குரியவர்கள் என்கிற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஆனால், அங்கிருந்து வந்த மக்கள் பாரத தேசத்தில் பரவி, இங்கே நம் மூதாதையர்களை அடக்கி ஆளும் ஆட்சியாளர்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர் என்றால் இன்றைய தலைமுறை நம்புமா? ஆனால், இது கசப்பான உண்மை. இது துவேஷத்தை விதைக்கும் செயலல்ல. உண்மையை உரக்கச்சொல்லும் உத்வேகம். மட்டுமே.

வருகை:

புறம்போக்கு நிலத்தை ஆங்காங்கு பலர் குடிசை போட்டு ஆக்கிரமிப்பதைப்போல அந்நிய தேசங்களிலிருந்து இங்குவந்து அவரவர் இஷ்டத்திற்கு பாரத மண்ணை வளைத்திருக்கிறார்கள். அவர்களை கண்டு கொள்ளாமல் இருந்ததன் மூலம் ”எவ்வளவு அடித்தாலும் அவன் தாங்குறாண்டா… அவன் ரொம்ப நல்லவண்டா” என பெயரெடுத்தோம். நமக்கு நாமே சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு தவிக்கத் தொடங்கினோம். 

அடிமை டு ஆட்சியாளர்:

பாரதத்தின் மீது அந்நிய படையெடுப்பு ஆண்டாண்டு காலமாக இருந்து வந்தது.  கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர், அதன் பிறகு பாரதத்தின் வளங்களை கொள்ளையடிக்க பலமுறை படையெடுத்த கஜினி முகம்மது, அதன் பின்னர் பாபர், மற்றும் பிற அரேபியர்கள், ஆங்கிலேயர்கள், போர்த்துக்கீசியர்கள், மற்றும் டச்சுச்க்காரர்கள் என பட்டியல் நீள்கிறது. 

பாரதத்தின் மீது இஸ்லாமியப் படையெடுப்பு பாபரால் நடைபெற்றபோது, அப்படைப்பிரிவில் வீரர்களாக இன்றைய எத்தியோப்பியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிகளிலிருந்து (நீக்ரோக்கள்) பெருவாரியானவர்கள் கலந்துகொண்டு போரிட்டனர். இது மட்டுமின்றி பலர் கலைஞர்களாகவும், வியாபரிகளாகவும், ஏன் அடிமைகளாக கொண்டுவரப்பட்டவர்களும் கூட  வந்ந்திருக்கின்றனர். அவர்களும் இஸ்லாமிற்கு மறியவர்களே. 

அவ்வாறு வந்தவர்கள் அவரவர்கள் வென்ற பகுதிகள், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் என ஆங்காங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். காலம் செல்லச் செல்ல அவர்களில் பலரும் மெல்ல மெல்ல சில பிரதேசங்களை ஆட்சி செய்யும் சுல்தான்களாக , நவாப்களாக  முன்னேறியுள்ளனர். 

பரதத்தின் மேற்கு கடற்கரைப்பகுதிகளான சாச்சின், ஜஞ்சிரா, தக்காண பீடபூமி, அன்றைய வங்காளப்பகுதிகள் என பரவியிருந்துள்ளனர். சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றும் கூட அவர்கள் சந்ததியினர் இங்கே நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர். 

சுவாமி ராகவேந்திரர் அவர்களுக்கு மாஞ்சோலை கிராமத்தை தானமாக அளித்த  அதோனி சுல்தானான மசூத்கான் கூட இந்த ஆப்பிரிக்க வம்சாவளி ஆட்சியாளர்களில் ஒருவனே. (என்ன கொடுமை சார் இது!) 

இந்த தகவல்களை இதுவரை அறியாதவர்களுக்கு இது வதந்தியாகவோ, அறியாதவனின் கருத்து வாந்தியாகவோ, இருக்கலாம். ஆனால், ஆதாரப்பூர்வமாக நிலைநாட்டுகின்றன பல இணையதளங்கள். நம் நாட்டின் “இந்தியன்  எக்ஸ்பிரஸ்” நாளிதழ் கூட கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்னர் இதுகுறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும் , “மேலும் பல செய்திகளுக்கு : இந்தியன் எக்ஸ்பிரஸ் ….”என ”பாகிஸ்தான் டிஃபென்ஸ்” இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.( – See more at: http://indianexpress.com/article/re…ory-we-choose-to-forget/#sthash.gYrMKsPL.dpuf)  அதில் ஏதோ ஆப்பிரிக்கர்களின் வரலாறு இந்தியாவில் இருட்டடிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் இன்று அவதியில் அல்லாடிக்கொண்டிருப்பது போல, பரிதாபப்பட்டிருக்கிறார்கள். 

ஆனால் இதுபற்றி எத்தனை கல்வியாளர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்? 

எத்தனை அரசியலாளர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்?

ஊடுருவிய அடிமைகள் நம்மை ஆண்டது நமது அவமானமா? அல்லது அவர்களது திறமையா?

இத்தகைய ஆதங்கம் எழுவது ஏன்? காரணம் ஒன்றுமட்டுமே… அதாவது சங்ககாலத்திற்கும் முற்பட்டே தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்படும் பிராமணர்களை , கைபர் போலன் கணவாய் வழியாக கால்நடை மேய்க்க வந்தவர்கள் எனக் கூறி ஆதரமின்றி கேவலப்படுத்துபவர்களுக்கு  ஆங்கிலேய, முகலாய, ஆப்பிரிக்க  கொடுங்கோலர்கள் ஆட்சி  வரலாறு  மட்டும் இனிக்கிறது. (என்ன அறிவுடமை ?!)

வந்தேறிகளால் உள்ளூர் ஆட்டக்காரன் பாதிக்கப்பட்ட விஷயம், அந்த ஆட்டக்காரர்களுக்கோ அவர்தம் சந்ததியினருக்கோ கூட தெரியாமல் இருப்பதும், வந்தேறிகளால் அவதிக்கு ஆளாவதும் எத்தனை பெரிய துயரம்? 

 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments