Home Uncategorized ஏர் இந்தியா விபத்து: நடந்தது எப்படி? முதற்கட்ட அறிக்கை வெளியீடு!

ஏர் இந்தியா விபத்து: நடந்தது எப்படி? முதற்கட்ட அறிக்கை வெளியீடு!

கடந்த ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா ஏ171 போயிங் டிரீம் லைனர் 787-8 ரக விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 242 பேரில், 11ஏ என்கிற அவசரகால கதவு அருகேயுள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், மற்ற அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுபோக, விமானம் மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் அங்கு இருந்த மாணவர்கள் உள்ளிட்ட 260 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வந்தது. இந்நிலையில் விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB), விபத்து நடந்து சரியாக ஒரு மாதம் கழித்து தனது 15 பக்க முதற்கட்ட அறிக்கையை இன்று (ஜூலை 12) வெளியிட்டிருக்கிறது

Exit mobile version