Home டிஜிட்டல் ஏஐ முதலீடுகள் லாபம் தருமா? சந்தையை பதறவைத்த சந்தேகம்..டெக் பங்குகள் கடும் சரிவு!

ஏஐ முதலீடுகள் லாபம் தருமா? சந்தையை பதறவைத்த சந்தேகம்..டெக் பங்குகள் கடும் சரிவு!

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மீதான முதலீட்டு வேகம் சற்று குறைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கப் பங்குச் சந்தையான வால் ஸ்டிரீட்டில் (Wall Street) ஒரே வாரத்தில் சுமார் 1.3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு துடைத்தழிக்கப்பட்டு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

செமிகண்டக்டர் மற்றும் சிப் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியைக் கண்டதே இந்த அதிரடி வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக, சர்வதேச அளவில் ஏஐ சிப் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ‘என்விடியா’ (Nvidia) நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் வரை சரிந்து, அதன் சந்தை மதிப்பில் 300 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, மற்றொரு முக்கியத் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரான் டெக்னாலஜிஸ்’ (Micron Technology) பங்குகள் 13 சதவீதம் என்ற மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ உள்கட்டமைப்புக்காகச் செய்யும் அசுரத்தனமான முதலீடுகள், குறுகிய காலத்தில் அதற்கான லாபத்தை ஈட்டித் தருமா என்ற சந்தேகம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்ததே இந்தத் திடீர் பங்குகளின் வீழ்ச்சிக்குக் காரணம் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த ஏஐ தொழில்நுட்பச் சரிவானது நாஸ்டாக் மற்றும் எஸ் அண்ட் பி 500 உள்ளிட்ட ஒட்டுமொத்த அமெரிக்கப் பங்குச் சந்தைகளையும் கணிசமாகக் கீழ்நோக்கி இழுத்துள்ளது.

Exit mobile version