அதிமுக பொதுக்குழு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே ஈபிஎஸ் மற்றும் அதிமுக சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இவ்வழக்கு இன்று (அக்டோபர் 21) விசாரணைக்கு வருகிறது.

