Home Uncategorized ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் சென்னை உள்பட நாடு முழுவதும் 24 நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தம், 14,627 பேர் தேர்வெழுதுகின்றனர்.

சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் 650 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வின் முதல் நாளில் இன்று காலை 9 மணி தொடங்கி  மதியம் 12 மணி வரை கட்டுரைத்தாள் தேர்வு நடைபெறும்

இதைத்தொடர்ந்து, 21-ம் தேதி காலை பொதுஅறிவு தாள்-1-ம், பிற்பகல் பொது அறிவு தாள்-2-ம், 22-ம் தேதி காலை பொது அறிவு தாள் -3-ம், பிற்பகல் பொது அறிவு தாள்-4-ம் நடைபெறும். அதன்பிறகு 28-ம் தேதி காலை மொழித்தாள் தேர்வும், பிற்பகல் ஆங்கிலம் தாள் தேர்வும் கடைசி நாளான 29-ம் தேதி காலையும் பிற்பகலும் விருப்பப் பாடங்களுக்கான தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.

Exit mobile version