Sunday, March 22, 2026
HomeUncategorizedஐயப்பனின் வீரவாளுடன் வலம் வந்த ஆபரண பெட்டி....

ஐயப்பனின் வீரவாளுடன் வலம் வந்த ஆபரண பெட்டி….

கேரள மாநிலம் புனலூர் பார்த்தசாரதி ஆலயத்தில் இருந்து ஆண்டு தோறும் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலுக்கு திருஆபரணங்கள் கொண்டு வந்து 10 நாள் மார்கழி மகா உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் அச்சன்கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளதால் இன்று அச்சன் கோவில் ஐயப்பனுக்கு அறிவிப்பதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள் அடங்கிய பெட்டி புனலூரில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. கோட்டைவாசல், காலங்கரை, செங்கோட்டை, இலஞ்சி, தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு ஐயப்ப பக்தர்களால் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆபரண பெட்டி அச்சன்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments