Home Uncategorized ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி தாக்கி இன்றுடன்

ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி தாக்கி இன்றுடன்

ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி தாக்கி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகிறது. நெஞ்சை விட்டு அகலாத இந்த கோர சம்பவத்தை நினைவு கூரும் வகையில் கடற்கரை பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி, சுனாமி பேரலை தமிழக கடற்கரையில் நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கடலூர் கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கியது. இந்த கோர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் (26-ந்தேதி) 13 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது.

குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோரின் நினைவலைகளிலேயே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்போர் ஏராளமானோர். அவர்கள் இந்தநாளில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதன்படி, சென்னை மெரினா, காசிமேடு, பட்டிணப்பாக்கம், திருவான்மியூர் ஆகிய கடற்கரை பகுதியில் இன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும், கடல் நீரில் பாலை ஊற்றியும் அஞ்சலி செலுத்துகிறார்கள். இது தவிர பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைதி பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுனாமியால் உறவுகளை இழந்தவர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது? சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்ப மக்களிடம் கேட்டால் இன்று கண்கள் விரிய பேசத் தயாராய் இருக்கிறார்கள்

Exit mobile version