தமிழக ஆளுநர் புரோகித்தை அ.தி.மு.க.,வின் ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., இன்று சந்தித்து பேச உள்ளனர்
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் நிலையில், கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவைக்கு வெளியே பதாகைகளை ஏந்தி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று சந்திக்கின்றனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 11.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
