ஆஸி., கிரிக்கெட் ஜாம்பவான் ஆலன் பார்டர், தான் பார்கின்சன் எனப்படும் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், “2016ம் ஆண்டே நோய் பாதிப்பு பற்றி தெரியும். யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தேன். 80 வயது வரை உயிரோடு இருந்தால் அதிசயம்” என்றார். இவரை கௌரவிக்கும் விதமாகதான் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
