போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நியமனம் செய்து இருந்த அத்தனை நியமன உத்தரவுகளையும் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். போக்குவரத்து துறையில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மற்ற அமைச்சர்களும் முதல்வரின் இந்த அதிரடி அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆட்சியின் போதும் அந்தக் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். தமிழகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு போக்குவரத்துக்கழக டிப்போவிற்கும் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம் .
அப்படித்தான் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக. டெப்போவிற்கு வழக்கறிஞர்களை நியமித்துள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன் இதற்காக 199 பேர் அடங்கிய வழக்கறிஞர்கள் பட்டியலை போக்குவரத்து கழக துறையின் முதன்மைச் செயலாளர் கோபால் ஐஏஎஸ்க்கு அனுப்பி இருக்கிறார். அவரும் கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று இதற்கான ஆணையை பிறப்பித்திருக்கிறார்.
