Home Uncategorized அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கண்காணிக்க உள்ளேன் – அதிரடி காட்டிய முதல்வர்

அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கண்காணிக்க உள்ளேன் – அதிரடி காட்டிய முதல்வர்

*அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே நேரில் கண்காணிக்க உள்ளேன்-மு.க.ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை* சட்டசபையில் அறிவித்துள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தார். அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் அப்போது மு.க.ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளோம். சட்டசபையில் அறிவித்துள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்று அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version