அமெரிக்காவின் S&P 500 பங்குச் சந்தை ஒரே நாளில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
டொனால்ட் டிரம்பின் புதிய இறக்குமதி வரி அறிவிப்பால் உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் அதிகரித்தது.
இதனால், S&P 500 ஒரு நாளில் சுமார் 176 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை இழந்தது, இது 2022க்குப் பிறகு மிகப்பெரிய சரிவாகும்.
ஆப்பிள், நைக் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் கடுமையாக சரிந்தன.
