Home Uncategorized அமரர் மதுரை அ. வைத்தியநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று.

அமரர் மதுரை அ. வைத்தியநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று.

சுதந்திரப் போராட்ட வீரரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான, அமரர் மதுரை அ. வைத்தியநாத ஐயர் அவர்கள் பிறந்த தினம் இன்று.

தீண்டாமை, சமூக ஏற்றத் தாழ்வு முதலானவற்றை ஒழிக்கப் பாடுபட்டவர். சுதந்திரப் போராட்டத்தில், கதர் ஆடை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம், என அனைத்துப் போராட்டங்களிலும், தாம் மட்டுமல்லாது, தமது குடும்பத்தினரையும் ஈடுபடச் செய்தவர். சுதந்திரப் போராட்டத்துக்காக, தமது வழக்கறிஞர் பணியோடு, தமது சொத்துக்களையும் தியாகம் செய்தவர். 

ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக, பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, மக்களின் அன்பைப் பெற்றிருந்த அமரர். வைத்தியநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.,-அண்ணாமலை

Exit mobile version