Home Uncategorized 50 சீட்டும், அமைச்சரவையில் பங்கும்.. பாஜக போடும் திட்டம்! கொந்தளிக்கும் அதிமுக!

50 சீட்டும், அமைச்சரவையில் பங்கும்.. பாஜக போடும் திட்டம்! கொந்தளிக்கும் அதிமுக!

பாஜக போடும் திட்டம்!  அமித்ஷாவின் தமிழக விசிட் பாஜகவினருக்கு ஹேப்பி என்றால் அதிமுகவினருக்கு சோகம் என்ற சூழலை உருவாக்கியுள்ளதாம்.   காரணம் மதுரையில் அமித்ஷாவின் ஆவேச பேச்சு. அதிமுக – பாஜக கூட்டணி அமைச்சரவை, 50 இடங்களில் வெற்றி என அவர் சூசகமாக பேசியது அதிமுகவினருக்கு சற்று சூட்டைக் கிளப்பியுள்ளது.   வரும் தேர்தலில் அதிமுகவின் குறைந்தபட்சம் 150 தொகுதி திட்டத்திற்கு இதனால் பின்னடைவு ஏற்படும். என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்?

மதுரையில் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2026 அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி தான் என உறுதிப்பட பேசி இருக்கிறார். கூட்டணி ஆட்சி அமைக்குமா? அல்லது கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்குமா? என்பதுதான் தற்போதைக்கு பேசுபொருளாக இருக்கிறது.

பாஜக கூட்டணி வேண்டாம் என நினைக்கும் சில அதிமுக சீனியர்கள் இதை சாக்காக வைத்து கூட்டணியை உடைத்து விடலாம் என திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்திருந்தார் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதில் அதிமுகவிடம் அதிக சீட்டுகளை கேட்டு பெற வேண்டும் என ஒரு நிர்வாகி சொல்ல அதிக சீட்டுகளை வாங்கி என்ன செய்யப் போகிறோம், குறைவான சீட்டுகளை வாங்கினாலும் அதில் ஜெயிக்க வேண்டும் என சிந்தியுங்கள் என வாயடைக்க வைத்துவிட்டாராம். அதே நேரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருக்கிறார்.

அதாவது கூட்டணி ஆட்சி அமைக்குமா அல்லது கூட்டணி கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்குமா? என்ற விவாதத்தை கிளப்பி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக ஆகிய கட்சிகள் தான் ஆட்சி அமைத்திருக்கின்றன. கூட்டணி கட்சிகளுக்கு எம்எல்ஏ சீட்டுகள் ஒதுக்கப்படுவதோடு சரி, சில நேரங்களில் வாரிய தலைவர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி என்ற வார்த்தையை முன் வைத்திருப்பது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

 

Exit mobile version