அணைமேடு பகுதியில் புதியதாகக் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சேலம் அணைமேட்டில் சுமார் ரூபாய் 92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
விழாவில்,சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, எம்.எல்.ஏ. ராஜேந்திரன், சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, தி.மு.க.வின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம் மற்றும் தி.மு.க.வினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 650 மீட்டர் நீளமுள்ள அணைமேடு மேம்பாலம், சேலம் மாநகர மக்களின் 40 ஆண்டுகால எதிர்பார்ப்பாக இருந்தது. மேம்பாலம் முழுவதும் இருபுறமும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
