Home Uncategorized அண்ணாமலை பங்கேற்ற மன் கி பாத் நிகழ்சி

அண்ணாமலை பங்கேற்ற மன் கி பாத் நிகழ்சி

சென்னை அடையாறில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்சியானது நடைபெற்றது. 

கராத்தே 
தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்யின் தமிழக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை :-

வருடத்தின் கடைசி ஞாயிற்று கிழமையான இன்று மனதின் குரல் நிகழ்சியானது தமிழகமெங்கும் 15000 இடங்களில் நடைபெற்று வருகிறது, இது அரசியல் சார்ந்த நிகழ்வு கிடையாது அனைத்து மக்களும் காணக் கூடிய ஒன்றாகும்

இந்தி திணிப்பை தமிழக பாரத ஜனதா கட்சியும் எதிர்க்கிறது, ஆனால் மாநில அரசு இந்தியை விருப்பத் தேர்வாகத்தான் வைத்துள்ளது ஆனால் இந்தியை எதிர்பதாக கூறும் திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளியில் கட்டாய பாடமாக உள்ளது.

1965 – 1986 ல் காங்கிரஸ் ஆட்சியில் தான் திமுக வுடன் இணைந்து இந்தி மொழி கட்டாய பாடமானது.

Exit mobile version