Home Uncategorized அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு 3 மணி நேரத்திற்கு  மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசித்த பக்தர்கள்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி மற்றும் சனி ஞாயிறு விடுமுறை நாளை  முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக  காத்திருந்து  ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்தனர்.

 கிரிவலமானது இன்று (15.11.2024) வெள்ளிக்கிழமை அதிகாலை 5:40 மணிக்கு  தொடங்கி பவுர்ணமி (16.11.2024) நாளை சனிக்கிழமை அதிகாலை 3:33 வரை  நடைபெறுகிறது.இந்த நிலையில், ஐப்பசி மாத பௌர்ணமி தினமான (இன்று 15.11.2024) திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை முதலில் தூறல் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றி வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

Exit mobile version