Saturday, March 28, 2026
HomeUncategorizedஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 2

ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாடல் 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பாடல் விளக்கம்: திருப்பாவை இரண்டாம் பாசுரத்தில் பாவை நோன்பு நோற்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய நான்கு விஷயங்களையும், தவிர்க்க வேண்டிய ஆறு விஷயங்களையும் தெரிவிக்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

அதிகாலையில் எழுந்து நீராடுவது முதல் கடமை, இறைவனின் நாமங்களையும், பாடல்களையும் பாடுவது இரண்டாவது கடமை. இறைவனுக்குத்தான் பூக்கள், மனிதர்களுக்கு அல்ல எனவே மார்கழியில் பூக்களை சூடாமல் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்கிறாள் ஆண்டாள்.

உணவில் நெய் சேர்க்காமல் பால் சாப்பிடாமல், கண்களுக்கு மை தீட்டி அழகு படுத்தாமல், பொய் சொல்லாமல், அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாமல் இருக்க வேண்டும்.

நம்மால் முடிந்த வரை ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். மற்றவர்கள் மகிழ்ந்து கொண்டாடும் வகையில் நம்முடைய நோன்பு இருக்க வேண்டும் என்று பாசுரத்தில் தெரிவிக்கிறார் ஆண்டாள் நாச்சியார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments