Home Uncategorized அஜித் ‘துணிவு’ படத்தில் இணைந்த அனிருத்

அஜித் ‘துணிவு’ படத்தில் இணைந்த அனிருத்

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 

இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெறும் ‘சில்லா சில்லா’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். 

இதனை ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். ‘துணிவு’ திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version