சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் சொன்ன சேதியிது சென்னை உள்பட பல ஊர்களில் ஒரு கோஷ்டொ , ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் 9 இடங்களில் போலி வங்கி நடத்தி மோசடி செய்துள்ளனர். நிஜ வங்கி போலவே டெபாசிட் செல்லான், சீல் என செட்டப் உடன் இயங்கியுள்ளது. சுமார் 2000 பேர் வாடிக்கையாளர்களாக இந்த வங்கியில் உள்ளனர்.
9 இடங்களில் போலி வங்கி நடத்தி மோசடி செய்தவர்களின் ரூ.56 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. போலி வங்கி நடத்தியவர்களிடம் இருந்து போலி பாஸ்புக், முத்திரைகள், கிரெடிட் கார்ட், பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு வருட காலமாக ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் போலியான வங்கியை நடத்தி வந்துள்ளனர். போலி வங்கி மோசடியில் சம்மந்தப்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று விசாரணை நடத்தி வருகிறோம்.
சென்னை, கள்ளக்குறிச்சி, சேலம், விருத்தாச்சலம், நாமக்கல், மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போலி வங்கி கிளைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த வங்கி நடத்தி 2,000 வாடிக்கையாளர்களை சேர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் கைது செய்து, ரூ.56 லட்சத்தை காவல்துறை முடக்கியுள்ளது மக்களும் இது போன்ற வங்கிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்
