Wednesday, March 4, 2026
HomeUncategorizedஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை! அதிரடி தீர்ப்பு!

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை! அதிரடி தீர்ப்பு!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது. 30 ஆண்டுகள் சிறை தண்டனையை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். கூடுதலாக 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

gnanasekaran

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கம், கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி பேட்டி அளித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments