Home Uncategorized ஆப்கானிஸ்தானை பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை – கமலா ஹாரிஸ்

ஆப்கானிஸ்தானை பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை – கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னதாக ஒரு வாரம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் வந்திருந்தார். இந்தோ பசிபிக் நாடுகளுடன் அவர் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். 

 ஆப்கான் நிலவரம் குறித்து அவர் கூறுகையில்,

அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமை வகிக்கிறது. ஆகவே எங்களது நாட்டின் பொறுப்பு எங்களுக்கு நன்றாக தெரியும். ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறினாலும் அப்பகுதியை பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை.

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து ஆசிய நாடுகளுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க கமலா இந்த ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

சிங்கப்பூரை அடுத்து அவர் வியட்நாம் சென்று வெளியுறவு துறை அதிகாரிகளை சந்தித்து கலந்தாலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version