தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று பெறுவது அவசியம். பொதுமக்கள் நேரடியாக சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்றால், தரகர்கள் ஆதிக்கத்தால் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்கும் நடைமுறையை பதிவுத்துறை அறிமுகம் செய்திருந்தது.
இந்த நிலையில், வில்லங்கச் சான்று (Encumbrance Certificate – EC) இனி இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என பத்திரப் பதிவுத் துறை தலைவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், 19.8.21 முதல் அனைத்து இ-சேவை மையங்களிலும், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் கோரி பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
