Home Uncategorized அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டதால் சர்ச்சை: போலீசார் தலையிட்டால் இயல்பு நிலைக்கு வந்தது

அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டதால் சர்ச்சை: போலீசார் தலையிட்டால் இயல்பு நிலைக்கு வந்தது

கடந்த வருடம் இக்கோவிலில் இரண்டு அர்ச்சகர்களை தவிர ஏனைய அர்ச்சகர்களை நீக்கி கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனால் அர்ச்சகர்கள் சிலர் மதுரை ஐகோர் கிளையில் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தனர்.

அதில் பல தலைமுறையாக கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருவதாகவும் இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து சென்னை ஐகோர் உத்தரவின் படி ரத்தினம் மற்றும் மணிகண்டன் ஆகிய இரு அர்ச்சகர்கள் தவிர ஏனைய அர்ச்சகர்கள் கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என திருக்கோவிலுக்கு ஆதரவாக ஆணை பிறப்பித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பாக திரண்டு அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கோவிலை முற்றுகையிட்டனர்.

இதனை அறிந்து வள்ளியூர் டிஎஸ்பி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனிடையே கோவில் நடை அடைக்கப்பட்டு சாவியை கோவில் தர்மகர்த்தா எடுத்துச் சென்று விட்டார்.

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு அர்ச்சகர்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும் என்ற நிலையில் அச்சர்களுக்கும் கோயில் நிர்வாகத்திற்கும் இடையே சில பிரச்சினை ஏற்பட்டது

அதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டனர் போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினை சுமூக நிலைக கொண்டு வரப்பட்டதால் கோவில் திறக்கப்பட்டது.

கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்….

Exit mobile version