Home Uncategorized ‘அரண்மனை 4’ படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில்

‘அரண்மனை 4’ படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில்

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பின் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. 

கதாநாயகியாக நடிகை தமன்னா நடிக்கிறார்.  ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் தேதி மாற்றப்பட்டது. தற்போது ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி குறிப்பிடப்படவில்லை. தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின் படம் வெளியாகும் என தெரிகிறது.

Exit mobile version