நம்பெருமாள் பகல் பத்து திருமொழித்திருநாள்
ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில்
சௌரிக் கொண்டை அணிந்து; அதில் கலிங்கத்துராய், சூர்ய-சந்திர வில்லை, நெற்றி சரம், கொண்டையில் முத்து பட்டை, கொண்டை அலங்கார குச்சம், அதில் சிறு தொங்கல் பதக்கம் அணிந்து; திருமாலை பாசுரங்களுக்காக ஆபரண அரசாக விளங்கும் திருவரங்க விமான பதக்கம், சிகப்பு கல் அடுக்கு பதக்கங்கள், 2 வட முத்து மாலை ; காசு மாலை ; சிகப்புக்கல் அபய ஹஸ்தம்;
பின் சேவையாக – ;
‘அரை சிவந்த ஆடை’ என்ற பாசுரப்படி சிவப்பு பட்டு உடுத்தி சேவை சாத்திக்கிறார்
