Home Uncategorized செம்மரம் கடத்தியதாக, தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைது

செம்மரம் கடத்தியதாக, தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைது

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக, தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியின் பல இடங்களில் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தும் பணியில் ஏராளமான கடத்தல்காரர்கள் ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

 இதையடுத்து, கிடைத்த ரகசிய தகவலின் படி, செம்மரக்கட்டைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 3 இடங்களில் செம்மர கட்டைகளை தூக்கி சென்றவர்களை வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்து, தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஆட்டோ, 6 பைக்குகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Exit mobile version