இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலை கட்டிய மாமன்னர் ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இத்தகைய சக்திவாய்ந்த வாராகி அம்மன் தனுக்கென்று தனி சன்னதி கொண்டு வீற்றிருக்கிறார்.
இத்தகை சக்திவாய்ந்த வாராகிக்கு ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரி வழிபாட்டின் போது பஞ்சமி திதியில் வாராகி தேவியை வழிபடலாம். மாத பெளர்ணமி, அமாவாசை மிகவும் மிகவும் சிறப்பானது. வாராகி மாலை படித்தால் அனைத்து துன்பங்களும் நம்மை விட்டு அகலும். இரவு 10 அல்லது 11 மணியளவில் மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும் வாராகியை மனம் உருகி வேண்டினால் கேட்பவை அனைத்தும் கொடுக்கும் தெய்வமாக நின்று துணை நிற்கும். இவருக்கு உண்டான அலங்காரம்.
19-06-2023 – மஞ்சள் அலங்காரம்
20-06-2023 – குங்கும அலங்காரம்
21-06-2023 – சந்தன அலங்காரம்
22-06-2023 – தேங்காய்ப்பூ அலங்காரம்
23-06-2023 – மாதுளை அலங்காரம்
24-06-2023 – நவதானிய அலங்காரம்
25-06-2023 – வெண்ணெய் அலங்காரம்
26-06-2023 – காய்கறி அலங்காரம்
27-06-2023 – பழங்கள் அலங்காரம்
28-06-2023 – புஷ்பம் அலங்காரம்
