சமீப காலமாக, பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பமடைந்து வருகிறது.
இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பர்டூ பல்கலைக்கழகம் அதன் ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது.
முந்தைய நிலையைவிட, பூமி தற்போது 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து இருப்பதாகவும், இது 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்தால், வெப்பம் காரணமாக மாரடைப்பு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது.
