கொரோனா தொற்று அதிகரித்து வரும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், பரிசோதனை, சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளார். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து கால அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

