Home Uncategorized அதிமுக உறுப்பினர்கள் மீது எந்த தவறும் கிடையாது – அண்ணாமலை

அதிமுக உறுப்பினர்கள் மீது எந்த தவறும் கிடையாது – அண்ணாமலை

முடித்துவைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் மீது எந்த தவறும் கிடையாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு வழக்கு திரும்ப விசாரிக்கப்படுகிறது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  கூறினார்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
 
பின்னர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்துள்ளனர். கொஞ்சம் இனிப்பு, பெரிய கசப்பு, பெருவாரியான காரம். இதுதான் தி.மு.க. ஆட்சியின் 100 நாள் சாதனை.

முடித்து வைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சேர்த்துள்ளனர். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எந்த தவறும் கிடையாது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version