Thursday, March 5, 2026
HomeUncategorizedஅ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது.
 
இந்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க. குற்றம் சுமத்தி உள்ளது. 

திமுக அரசை கண்டித்து  எடப்பாடி பழனிச்சாமி மற்றும் போடியில் ஓ.பன்னீர்செல்வம் ஆர்பாட்டம் நடத்தினர். 

“விடியல்கார அண்ணாச்சி டீசல் விலை என்னாச்சு?

கொரோனா நோய்க்கு சிகிச்சை கொடு, உண்மையை சொல்ல பயிற்சி எடு

சொன்னதை செய் திமுக – வே தமிழக மாணவர்களை ஏமாற்றாதே

மேகதாதுவில் அணையா இனி காவிரி தண்ணீர் கனவா?”

என கோஷங்களை எழுப்பினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments