Home Uncategorized அ.தி.மு.க.வுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம். எனவே கூட்டணியில் விட்டு கொடுத்து செல்வோம் – அண்ணாமலை

அ.தி.மு.க.வுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம். எனவே கூட்டணியில் விட்டு கொடுத்து செல்வோம் – அண்ணாமலை

இந்திய பிரதமர் மோடியின் 71- வது பிறந்தநாளையொட்டி  சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில தலைவர் அண்ணாமலை, பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த டிஜிட்டல் டி.வி. மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் (பன்கி பாத்) கலந்துரையாடலை கேட்டு அவரிடம் பேசவும் முடியும். சமூக நீதியை பிரதமர் நரேந்திர மோடி நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். எங்களுக்கு அவர்தான் சமூகநீதி காவலர்.

மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க.வுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம். எனவே கூட்டணியில் விட்டு கொடுத்து செல்வோம். சுமூகமான முறையில் கூட்டணி இடபங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Exit mobile version