Friday, April 24, 2026
Homeஉலகம்ஈரான் பயணம் தவிர்க்க அவசர எச்சரிக்கை!

ஈரான் பயணம் தவிர்க்க அவசர எச்சரிக்கை!

ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியர்கள் யாரும் தற்போதைய சூழலில் வான் வழியாகவோ அல்லது நிலப்பகுதி வழியாகவோ ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

ஏற்கனவே ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள், தூதரகத்தின் வழிகாட்டுதலின்படி அதிகாரப்பூர்வ நிலப்பகுதி வழித்தடங்களைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவசர உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு இந்தியத் தூதரகத்தை +989128109115, +989128109109, +989128109102, +989932179359 ஆகிய எண்களிலோ அல்லது cons.tehran@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments