Home Uncategorized மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜை நிறைவு பெறுகிறது

மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜை நிறைவு பெறுகிறது

மண்டல பூஜை மற்றும் மகர விளக்குப் பூஜை முடிந்ததை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமிக்குச் செய்யப்படும் நெய் அபிஷேகம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஜனவரி 20ஆம் தேதி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அன்புடன் நடை மூடப்படுகிறது. அதன் பிறகு மாசி மாத பூஜைக்காகப் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நடை திறக்கப்படும்.

மகர விளக்குப் பூஜை நடந்த காலத்தில் மட்டும் 48 லட்சம் பக்தர்கள் வந்திருப்பதாகக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தரிசனம் செய்ய சுமார் 2 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த சீசன் மட்டும் சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Exit mobile version