சபரிமலையில் பக்தர்களுக்கு ஜெர்மன் பந்தல்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் வெயில் மழை காலங்களில் பக்தர்கள் சிக்கித் தவிக்கும் நிலையைத் தீர்க்க நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் ஜெர்மன் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பந்தல்கள் போடப்பட்டுள்ளது…
நிலக்கல்லில் 18 ஆயிரம் சதுர அடியிலும், பம்பையில் 22 ஆயிரம் சதுர அடியிலும், சன்னிதானத்தில் 10 ஆயிரம் சதுர அடியிலும் பந்தல்கள் போடப்பட்டுள்ளது
மேலும் பம்பையில் கூடுதல் நடைபாதைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன…
