சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் ஆங்கில பத்திரிகையில் மூத்த உதவி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கோலப்பன்(54). இவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
இவர் நேற்று தனது வங்கிக் கணக்கிலிருந்து தனது மகளுக்கு கூகுள் பே மூலம் 5000 ரூபாய் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அவர் அனுப்பிய பணம் மகளுக்கு சென்றடையாததால் கூகுளில் கஸ்டமர் கேர் எண்ணை தேடி எடுத்து அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த லிங்கை தொட்டவுடன் அவரது வங்கிக்கணக்கில் இருந்து 88,682 ரூபாயை மூன்று தவணைகளாக எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோலப்பன் உடனடியாக அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூத்த பத்திரிகையாளர் வங்கிக்கணக்கில் இருந்து 89 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
