Sunday, September 27, 2026
HomeUncategorizedமேக்கப் போடாமலே அழகா தெரியனுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க! அசந்துடுவீங்க!

மேக்கப் போடாமலே அழகா தெரியனுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க! அசந்துடுவீங்க!

இன்றைய நாகரிகம் மற்றும் பண்பாடு நிறைந்த வாழ்க்கையில், சரும மற்றும் முக அழகுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை, இளம் வயதினர் மற்றும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் தங்கள் முகம் பொலிவு பெற பல விதமான கெமிக்கல் அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த அழகு சாதன பொருட்கள் பல விதமான கெடுதலை தரக்கூடிய கெமிக்கல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன, இதனால் ஒவ்வாமை மற்றும் பிற்காலத்தில் கேன்சர் நோய் உருவாகும் ஆபத்துக்கள் உள்ளன. எனவே, நாம் முடிந்தவரை தேவையில்லாத கெமிக்கல்களை உடலில் பயன்படுத்துவதை நிறுத்தி, இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தி நலம் பெற வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.

முகப்பொலிவு தரும் மூலிகைகள்:

குப்பைமேனி இலை, வேப்ப இலை, மற்றும் துளசி இலைகள் மிகச்சிறந்த கிருமிநாசினி மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் பண்புகளை கொண்டுள்ளன. இந்த இலைகளை உள்ளுக்காகவோ அல்லது வெளிப்பூச்சாகவோ பயன்படுத்தும் போது பல நன்மைகளை பெறலாம்.

இளம் வயதினருக்கு முகப்பருக்கள் ஒரு பெரிய சவாலாக உள்ளன, முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகள் அவர்களின் முகத்தோற்றத்தை பொலிவில்லாமல் ஆக்குகின்றன. இந்த முகப்பருக்களுக்கும் கரும்புள்ளிகளுக்கும் நாம் ஒரு தீர்வை காண்போம்.

மூலிகை ஃபேஸ் பேக்:

குப்பைமேனி, வேப்ப, மற்றும் துளசி இலைகளை சம அளவில் எடுத்து, நிழலில் உலர்த்தி, பின்னர் மிக்ஸியில் அரைத்து பவுடர் ஆக்கி ஸ்டோர் செய்யலாம். தேவைப்படும்போது அரை டீஸ்பூன் பவுடரை எடுத்து, பன்னீரில் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் பூசி, அரை மணி நேரம் காய விட்டு, பின்னர் தண்ணீரில் கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து அல்லது ஒரு நாள் விட்டு மறுநாள் செய்து வர, 60 நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் கண்டிப்பாக மறையும் முகத்தில் உள்ள சுருக்கங்களும் முகத்தில் உள்ள கருவளையம் அனைத்தும் சரியாகும். இயற்கையாகவே சர்மம் பொலிவுடன் காணப்படும். இந்த ஃபேஸ் பேக்  முகப்பருக்களை உருவாக்கும் கிருமிகளை அழித்து முகப்பரு வராமலும் கரும்புள்ளிகள் ஏற்படாமலும் சரும சுருக்கம் அறவே வராது. இந்த இயற்கையான பொருட்களை நீங்கள் தைரியமாக பயன்படுத்தி நல்ல மாற்றத்தை காண்பீர்கள் எந்த ஒரு பக்க விளைவுகளும் அலர்ஜிவும் ஏற்படாது உடலுக்கு நன்மை தரக்கூடிய இந்த மூலிகைகளை பயன்படுத்தி நாம் சரும ஆரோக்கியத்தை பெற்று சந்தோஷமாக வாழ்வோம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments