Monday, July 13, 2026
Homeசெய்திகள்பெங்களூரு காற்று... மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பதற்கு சமமா?

பெங்களூரு காற்று… மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பதற்கு சமமா?

பெங்களூரு நகரில் நிலவும் மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் மக்கள், தாங்கள் அறியாமலேயே மாதத்திற்குப் பத்து சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமமான பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக, புகைப்பிடிக்கும் பழக்கமே இல்லாத ஒரு நபர் கூட பெங்களூருவில் வசிப்பதன் மூலமாக மட்டுமே, தினசரி சிகரெட் பிடிப்பவருக்கு நிகராகத் கடுமையான நுரையீரல் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாகனப் பெருக்கம் மற்றும் காற்றில் கலந்துள்ள நச்சுத் துகள்களின் அளவு அதிகரித்துள்ளதே இந்த மோசமான நிலைக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இந்தத் தகவல் அங்குள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments