Home செய்திகள் “வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்” — எடப்பாடி பழனிசாமி பதிவு பரபரப்பு!

“வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்” — எடப்பாடி பழனிசாமி பதிவு பரபரப்பு!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சிக்குத் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் “நான் இந்த ஆட்டத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கும் வகையில் அவரது பதிவு அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

Exit mobile version