காலை 10 மணிக்கு முக்கிய முடிவை அறிவிப்பதாகச் சொல்லி, ஒட்டுமொத்த ஊடகத் துறையினரையும் வரவழைத்துவிட்டு, மாலை 4 மணிக்குத்தான் அறிவிப்பு என விசிக தரப்பு இழுத்தடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக, கொட்டும் மழையிலும் போதிய வசதிகள் இல்லாத இடங்களிலும் செய்தியாளர்களைக் காத்திருக்க வைப்பது அவர்களின் உழைப்பை அவமதிக்கும் செயலாகும். ஒரு அரசியல் கட்சி தன் முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படலாம், ஆனால் அதை முறையான அறிவிப்பு மூலம் ஊடகங்களுக்குத் முன்கூட்டியே தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
செய்தி சேகரிக்க வரும் நிருபர்களை ‘முட்டி போட’ வைக்காத குறையாக மணிக்கணக்கில் காக்க வைப்பது, ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்களுக்குக் கொடுக்கும் மரியாதை அல்ல. வரும் காலங்களில் இது போன்ற திட்டமிடல் இல்லாத செயல்களைத் தவிர்த்து, ஊடகவியலாளர்களின் நேரத்தையும் உழைப்பையும் மதிக்க வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
