Sunday, March 22, 2026
HomeUncategorizedமதுரை ஆதீனம் விவகாரம்: நாடகமாடும் திமுக அரசு.. அண்ணாமலை வேதனை!

மதுரை ஆதீனம் விவகாரம்: நாடகமாடும் திமுக அரசு.. அண்ணாமலை வேதனை!

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தமிழக காவல்துறை மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, குடல் இறக்கம் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களை, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று, விசாரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்புறுத்தி விட்டு, தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று திமுக அரசின் காவல்துறை கூறுவது, உள்நோக்கம் கொண்டது.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.  பத்து வயது குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்தியவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கிட்னி திருடும் திமுக கும்பலை விசாரிக்க நேரமில்லை. காவல்துறையினருக்கே திமுகவினரால் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. ஆனால், உப்புசப்பில்லாத காரணங்களைக் கூறி, மதச்சார்பின்மை என்ற பெயரில், யாரையோ திருப்திப்படுத்த, நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.  

அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, திமுக அரசின் காவல்துறை கைவிட வேண்டும். உடனடியாக, அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். – அண்ணாமலை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments